சொந்த வீடு வாங்குவது பலரது கனவாகும், இப்போது அந்த கனவை நனவாக்க பல வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன்களை வழங்கி வருகின்றன.
வீட்டு கடன் வாங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வங்கியில் எவ்வளவு வட்டி விகிதங்கள் போடப்படுகிறது என்பது குறித்து தெளிவாக கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
வட்டி விகிதம் குறைவாக இருந்தால் உடனேயே அந்த வங்கியில் கடன் வாங்கிவிட கூடாது, கடன் கொடுப்பதற்கு முன் இதர கட்டணங்கள் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
கடனை பெற்றுக்கொண்டதும் மாதம் தோறும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்த வேண்டும், அவ்வாறு தவணை தொகையை செலுத்தாவிட்டால் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும்.
நீங்கள் வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன்னரே செலுத்த விரும்பினாலும் வங்கி உங்களுக்கு எவ்வித கட்டண சலுகையும் வழங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சில வங்கிகள் கடன் தொகையில் 0.50% செயல்பாட்டு கட்டணத்தை வசூலிக்கின்றன, சில வங்கிகள் 7% வரை கடன் தொகையில் செயல்பட்டு கட்டணத்தை வசூலிக்கின்றன.