அஸ்தமனமாகும் சுக்கிரன்... பண நெருக்கடியை தவிர்க்க செய்ய வேண்டிய சில பரிகாரங்கள்!

கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அதன் உதயம், அஸ்தமனம்,  நிலை மாற்றம் ஆகியவையும் ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஒரு கிரகம் அஸ்தமனம் ஆகும் போது ஏற்படும் அசுப பலன்கள் சில குறிப்பிட்ட ராசிகளில் பாதிப்பை ஏர்படுத்தும். அதற்கான சில பரிகாரங்களை செய்யும் போது, அதன் தாக்கும் குறையும். 

1 /7

சுக்கிரன் அஸ்தமனம் 2023: சுக்கிரன் 03 ஆகஸ்ட் 2023 அன்று இரவு 07:37 மணிக்கு சிம்மத்தில் அஸ்தமிக்கிறது. சுக்கிரன் அஸ்தமன ஆவது பல ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்து செல்வம், ஈர்ப்பு, தாம்பத்தியம் போன்றவற்றைப் பறிக்கும். இதைத் தவிர்க்க, சில பாரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

2 /7

கிரகங்கள் அஸ்தனம் ஆகும் போது அவற்றின் சுப பலன் குறையத் தொடங்குகிறது. சுக்கிரன் அஸ்தமனத்தில் இருந்தால் சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்படும். திருமண வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சி தொலையலாம். காதல் உறவில் வெற்றி கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரனின் அசுப பலன்களைத் தவிர்க்க, வெள்ளிக்கிழமை உப்பு சாப்பிடாமல் விரதம் இருக்கவும்.

3 /7

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய  ராசிக்காரர்கள் சுக்கிரன் அஸ்தமனத்திற்குப் பிறகு தினமும் வாசனை திரவியங்கள் பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் மகிழ்ச்சி குறையாமல் இருக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பார்.

4 /7

சுக்கிரன் அஸ்தமிக்கும் போது, ​​ஒரு நபரின் அழகில் மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. ஓம் த்ரன் த்ரின் த்ரௌன் சஹ் சுக்ரே நமஹ் மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.

5 /7

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் சுக்கிரன் அஸ்தமிக்கும் போது பாதிப்புகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், பண இழப்பைத் தவிர்க்க, தினமும் ஸ்ரீசூக்தத்தைப் படியுங்கள். வெண்மையான பொருட்களை தானம் செய்யுங்கள்.  

6 /7

சுக்கிரன் அஸ்தமனம் ஆவதால்,  உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இதைப் போக்க, பத்து வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு பால் பாயஸம் கொடுக்கவும். சுக்கிரன் உதயமாகும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இது சுப பலன்களைத் தரும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. விரிவான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஜொதிட நிபுணரை அணுகவும்.