2024ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெரும் டாப் 10 விளையாட்டு வீரர்கள் - லிஸ்டில் 'இவர்கள்' இல்லை!

Top 10 Highest Paid Sports Personality: கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவை எனலாம். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறும் டாப் 10 வீரர்களை இங்கு காணலாம்.

  • May 17, 2024, 23:17 PM IST

2024ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் இந்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வருமானத்தின் மதிப்பு அமெரிக்க டாலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

1 /10

10. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அமெரிக்க வகை கால்பந்து வீரர் லாமர் ஜாக்சன் 100.5 மில்லியன் அமெரிக்க டாலருடன் 10வது இடத்தை பிடித்தார். 

2 /10

9. அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஸ்டெஃப் கறி 102 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஒன்பதாவது இடத்தை பிடித்தார்.  

3 /10

8. பிரான்ஸ் கால்பந்து வீரர் கரீம் பென்சிமா 106 மில்லியன் அமெரிக்க டாலருடன் எட்டாவது இடத்தை பிடித்தார்.   

4 /10

7. பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 108 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஏழாவது இடத்தை பிடித்தார்.   

5 /10

6. பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே 110 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஆறாவது இடத்தை பிடித்தார்.  

6 /10

5. கிரேக நைஜிரிய கூடைப்பந்து வீரர் கியானிஸ் அன்டெட்டோகவுன்ம்போ 111 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

7 /10

4. அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 128.2 மில்லியன் அமெரிக்க டாலருடன் நான்காவது இடத்தை பிடித்தார்.

8 /10

3. அர்ஜென்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 135 மில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.  

9 /10

2. ஸ்பெயின் நாட்டு கோல்ஃப் வீரர் ஜான் ரஹ்ம் 218 மில்லியன் அமெரிக்க டாலருடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.  

10 /10

1. போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் அமெரிக்க டாலருடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.