இந்த 5 உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்! நுரையீரல் பாதிப்புக்கு இவையே காரணம்

Lungs Hurting Diet: ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகமாக பார்த்து சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியாகும். அதிலும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. எனவே நுரையீரல் செயல்பாட்டை சீர்குலைக்கும் உணவுகளை தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.

1 /10

நுரையீரல் பாதித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரச்சனை ஏற்படும். இது சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா என சாதாரணமானது முதல் மோசமான நோய்களையும் ஏற்படுத்தும். எனவே, நுரையீரலை பாதிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2 /10

சுவாச அமைப்புக்கு அடிப்படையான நுரையீரலுக்கு இயற்கையான பாதிப்புகளைத் தவிர நாம் உண்ணும் உணவும் காரணமாக இருக்க வேண்டுமா? 

3 /10

தண்ணீர், மூலிகை தேநீர் என ஆரோக்கியமான பானங்களை தேர்வு செய்யலாம்

4 /10

எட்டு வாரங்களுக்கு நீடிக்கும் இருமல் நாள்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முக்கியமான ஆரம்ப அறிகுறி உங்கள் சுவாச அமைப்பில் உள்ள பிரச்சனைக்கு உங்களை எச்சரிக்கிறது.

5 /10

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உணவுகள் தீங்கு விளைவிக்கும் என்றால், அதைவிட  மோசமானது புகைபிடிக்கும் பழக்கம். புகைபிடிக்கும் பழக்கம் என்பது, நம்மை மட்டும் அல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களின் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும், எனவே தயவு செய்து சிகரெட் புகைப்பதை தவிர்க்கவும்

6 /10

சர்க்கரை சோடாக்கள், எனர்ஜி பானங்கள் மற்றும் அதிகப்படியான பழச்சாறுகளைத் தவிர்க்கவும். சர்க்கரை பானங்கள் வீக்கம் மற்றும் உடல் எடையை அதிகரித்து நுரையீரலுக்கு சுமையை ஏற்படுத்தும்

7 /10

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன, இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் நுரையீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். முடிந்தவரை புதிதாக சமைத்த உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

8 /10

பால் பொருட்கள் அனைவருக்கும் ஒத்துவராது. இது, சளி உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். பால் பொருட்கள் உங்கள் சுவாசத்தை மோசமாக்கினால், அதை தவிர்ப்பது நல்லது. பாதாம் அல்லது சோயா பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் மாற்றுகள் சிறந்த மாற்றாக இருக்கும்.

9 /10

அதிகப்படியான உப்பு உட்கொள்வது உடலில் திரவம் அதிகமாவதற்கும், உடல் வீக்கத்தையும் ஏற்படுத்தும். வெளியில் இருந்து உணவுகளை வாங்கும்போது, அதிலுள்ள லேபிள்களைப் படித்து, சோடியம் உட்கொள்ளலைக் கவனிப்பது நல்லது

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை