Top 5 Fitness Apps: உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..!

ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்க நினைப்பவர்களுக்கு, டெக்னாலஜி கைகொடுக்கிறது. உங்கள் விரல் நுனியிலேயே உங்களின் ஹெல்த் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுமளவிற்கு செயலிகள் உள்ளன.

அவற்றில் டாப் 5 செயலிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.  

1 /5

கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான செயலி கூகுள் ஃபிட். இந்த செயலியில் இருக்கும் ஒர்க் அவுட் டிராக்கர் பெஸ்டாக இருக்கிறது. யூசர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் உங்களின் உடல் செயல்பாட்டின் வேகம், உயரம், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவைகள் அப்டூ டேட்டாக உடனுக்குடன் இந்த செயலியில் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். கலோரிகளின் எரிப்பையும் தெரிந்து கொள்ளலாம். 

2 /5

தினசரி யோகா செய்பவர்களுக்கு இந்த செயலி மிகவும் உபயோகமாக இருக்கும். டெய்லி யோகா செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றில் வரும் தினசரி குறிப்புகளை பயன்படுத்தலாம். நீங்கள் யோகா செய்ய தொடங்கும் நேரம் முதல் முடிக்கும் வரையிலான நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். இதில் இருக்கும் வாய்ஸ் கிளிப், யூசர்களை டைரக்ஷனும் செய்யும்.

3 /5

மிகச்சிறந்த பிட்னஸ் டிராக்கர் செயலிகளில் இதுவும் ஒன்று. தனிநபர்களுக்கு மட்டுமில்லாமல், பிட்னஸ் பயிற்சியாளர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். ஜெஃபிட் ஒர்க் அவுட் டிராக்கரில் மட்டும் சுமார் 1300 க்கும் மேற்பட்ட பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை ஜிம் டிரெயினர் இல்லாமல் கூட, நீங்களே கற்றுக்கொள்ளும் வகையிலான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.  

4 /5

யூசர்களின் உடற்பயிற்சி இலக்குகளை எட்டுவதற்கும், அதனை தினசரி கண்காணித்து ரிமைன்ட் செய்யவும் சரியான ஒரு செயலி. எடை அதிகரிப்பு, எடை இழப்பு, நீங்கள் அருந்தும் தண்ணீரின் அளவு, உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு, சாப்பாட்டின் அளவு, தூக்கத்தின் நேரம் உள்ளிட்டவைகளை அப்டூ டேட்டாக, தகவல்களை சேமித்து வைத்திருக்கும். மேலும், உபகரணங்கள் தேவைப்படாத ஒர்க்அவுட் பயிற்சிகளும், அதற்கான வீடியோக்களும் இந்த செயலியில் இருக்கும்.

5 /5

உடல் பருமனால் அவதிப்பட்டு, அதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருபவர்களுக்கு இந்த செயலி சரியான ஒன்றாக இருக்கும். நீங்கள் எதை சாப்பிட வேண்டும், எதனை சாப்பிடக்கூடாது உள்ளிட்ட தகவல்களைக் கூட தெரிவிக்கும். 6 மில்லியன்களுக்கும் மேலான உணவுப் பொருட்களின் டேட்டா இந்த செயலியில் உள்ளது.