சென்னையில் இப்படியெல்லாம் இடம் இருக்கிறதா? மறைந்திருக்கும் அதிசயங்கள்!

சென்னை பலதரப்பட்ட மக்களையும், பாரம்பரிய நினைவு சின்னங்களையும் கொண்டுள்ளது. மெரினா கடற்கரை, கபாலீஸ்வரர் கோவில் தாண்டி பல இடங்கள் சுற்றிப்பார்க்க உள்ளன.

 

1 /6

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் விவேகானந்தர் இல்லமும் ஒன்று ஆகும். ​​இது ஒரு அருங்காட்சியகமாகும், இங்கு அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.  

2 /6

சென்னை நகரின் மையப்பகுதியில் அமைத்துள்ள அழகிய தோட்டம் செம்மொழி பூங்கா. இந்த பெரிய, பசுமையான இடம் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு அரிய தாவரங்கள், அமைதியான நடைப்பயணம் மற்றும் இயற்கையை ரசிக்கலாம்.  

3 /6

கிண்டி தேசிய பூங்கா சென்னையில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பார்வையிடக்கூடிய ஒரு அழகான இடம் ஆகும். இது நகரத்தின் மையத்தில் அமைத்துள்ளது. மொத்தம் 2.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மான் மற்றும் பறவை போன்றவற்றை இங்கு காணலாம்.  

4 /6

தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னைக்கு அருகில் உள்ளது. இங்கு சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் வாழ்கின்றன.  

5 /6

சென்னையின் அழகிய கடற்கரையை புரோக்கன் பிரிட்ஜ் என்ற இடத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்த பாலம் அடையாறு ஆற்றின் அருகே உள்ளது. சூரியன் மறையும் போது கடல் இந்த இடம் அழகாக காட்சியளிக்கும்.  

6 /6

காசிமேடு மீன்பிடி துறைமுகம் சென்னையின் பழமையான மற்றும் பரபரப்பான மீனவர்கள் பணிபுரியும் இடமாகும். இங்கு தினமும் மீன் பிடித்து கொண்டு வருவதையும், பரபரப்பான கடலோர சமூகத்தின் வேடிக்கையையும் உற்சாகத்தையும் பார்க்க முடியும்.