ஹைதராபாத் அடித்த 287 ரன்கள்... டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் - முதலிடத்தில் யார்?

Top 7 Highest Scores In T20 History: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று 287 ரன்களை குவித்தது. இது ஆடவர் டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில், டி20 வரலாற்றில் டாப் 7 அதிகபட்ச ஸ்கோர்களை இங்கு காணலாம். 

  • Apr 15, 2024, 23:05 PM IST

ஆடவர் டி20 வரலாறு என கணக்கிடும் போது, சர்வதேச போட்டிகள், உள்ளூர் டி20 போட்டிகள், ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் என அனைத்தும் உள்ளடக்கப்படும்.

 

1 /7

7வது இடம்: சீனாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தாய்லாந்து அணிக்கு எதிராக மலேசியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. (புகைப்படம்: ட்விட்டர்)  

2 /7

6வது இடம்: நடப்பு ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். (புகைப்படம்: ட்விட்டர்)  

3 /7

5வது இடம்: நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். (புகைப்படம்: ட்விட்டர்)

4 /7

4வது இடம்: ஐரோப்பாவின் ரொமானியா நாட்டில் நடைபெற்ற கான்டீனென்டல் கப் தொடரில் துருக்கி அணிக்கு எதிராக செக் குடியரசு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை எடுத்தது.  (புகைப்படம்: ட்விட்டர்)

5 /7

3வது இடம்: உத்தரகாண்டின் டேராடூன் நகரில் நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை எடுத்து 278 ரன்களை அடித்தது. (புகைப்படம்: ட்விட்டர்)  

6 /7

2வது இடம்: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை எடுத்தது. இது ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோராகும். (புகைப்படம்: ட்விட்டர்)  

7 /7

முதல் இடம்: சீனாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலிய அணிக்கு எதிராக நேபாள அணி 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்தது. இதுவே டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். (புகைப்படம்: ட்விட்டர்)