புதுடெல்லி: கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீச்சாளரின் பங்கு எப்போதும் மிக முக்கியமானது. ஒரு பந்து வீச்சாளர் எப்போதும் கடினமான போட்டிகளில் தனது அணிக்கு வெற்றித் தேடித்தருகிறார்கள். ஒரே ஒரு ரன் கூட வெற்றி தோல்வியை மாற்றிவிடும். நோ பால் வீசினால் வெற்றிக்கான வாய்ப்பை பவுலரே கொடுக்கிறார் என்றும் சொல்வதுண்டு. இன்று வரை ஒரு நோ பால் கூட வீசாத பந்து வீச்சாளர்கள் 5 பேர். பிரபலமான இந்தப் பட்டியலில் இந்தியர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
1983 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ், தனது வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசவில்லை. கபில் இந்தியாவுக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் 5248 ரன்கள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3783 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், 434 டெஸ்ட் மற்றும் 253 ஒருநாள் விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கபில்தேவ்.
பாகிஸ்தானின் வெற்றிகரமான கேப்டன் இம்ரான் கான், தனது வாழ்க்கையில் ஒரு நோ-பால் கூட வீசாத உலகின் 5 பந்துவீச்சாளர்களில் ஒருவர். 1982ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இம்ரான் கான் பதவியேற்றார். 1992 இல், பாகிஸ்தான் தனது ஒரே மற்றும் முதல் ஒருநாள் உலகக் கோப்பையை இம்ரானின் தலைமையின் கீழ் வென்றது. பாகிஸ்தானுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3807 ரன்கள் குவித்துள்ள இன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 362 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் இயான் போத்தமின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசவில்லை. 102 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை வீழ்த்திய போத்தம், பேட்டிங் மூலம் 5200 ரன்கள் எடுத்தார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2113 ரன்கள் மற்றும் 145 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் டெனிஸ் லில்லியின் பெயரும் வருகிறது. லில்லி தனது வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசவில்லை. 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லான்ஸ் கிப்ஸ், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசவில்லை. இந்த ஆஃப்-ஸ்பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்காக 79 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு நோ பால் கூட வீசாத ஒரே சுழற்பந்து வீச்சாளர் இவர்தான்.