கொழுப்புக்கு குட்பை!! அடம்பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் சிம்பிளான உணவுகள்

Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. 

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற சில தீவிர நோய்களை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.  சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியும். இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

பல வித ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும். சில இயற்கையான வழிகளில் இதை செய்யலாம். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /9

கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதயம் மட்டுமல்லாமல் நார்ச்சத்து செரிமான அமைப்பையும் சீராக வைக்கின்றது.

3 /9

ஓட்ஸில் நார்ச்சத்தும் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை காலை உணவில் உட்கொண்டால் நாள் முழுதும் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.

4 /9

தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும். பூண்டை பல வகைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

5 /9

புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. பெர்ரி வகைகளில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றன. இது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும்.

6 /9

பீன்ஸை அடிக்கடி உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது பச்சை காய்கறிகளில் மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது. இதில் உடலுக்கு தேவையான அதிக ஊட்டச்சத்துகள் இருப்பதுடன் இது நிறைவான உணர்வையும் அளிக்கின்றது. 

7 /9

கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. தினமும் ஆப்பிளை உட்கொள்வதால் செரிமானமும் சீராகும். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.

8 /9

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த முழு தானியங்கள் உதவும். கினோவா, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முழு தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.