Travel Spot Kasol: 5000 ரூபாய் செலவில் மினி இஸ்ரேல் டூர் போகலாமா?

Tourist Spot Of India new year 2023: புத்தாண்டுக்கு சுற்றுலா போக திட்டமிடுபவர்கள், அதற்கான செலவையும் மனதில் வைத்தே திட்டமிடுவார்கள்.

 இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் தரமான இடம், மலிவான செலவு என்று இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இந்திய சுற்றுலாத்தலங்கள் இவை... 

1 /5

புத்தாண்டைக் கொண்டாட கசோல் சரியான இடம். கசோல் உங்கள் இதயத்தை வெல்லும் ஒரு இடம். கசோலின் அழகிய பள்ளத்தாக்குகள் மக்களை மீண்டும் மீண்டும் இங்கு வர வற்புறுத்துகின்றன.

2 /5

புத்தாண்டின் போது கசோலில் நீங்கள் மிகவும் உற்சாகமாக பொழுதைக் கழிக்கலாம். டெல்லியிலிருந்து கசோலுக்கு செல்ல பேருந்து உண்டு, 500 முதல் 1000 ரூபாய் கட்டணம். டெல்லியிலிருந்து பஸ் மூலம் கசோலை அடைய சுமார் 12 மணிநேரம் ஆகும். இருப்பினும், நீங்கள் கசோலுக்கு விமானத்தில் செல்ல விரும்பினால், குலு விமான நிலையம் அருகில் உள்ளது

3 /5

கசோல் ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வாடகை ஆகும். கசோலைச் சுற்றியுள்ள மலானா மற்றும் கீர்கங்காவுக்குச் செல்லலாம். டெல்லியில் இருந்து கசோல் சென்று வருவதற்கு ஒருவருக்கு நான்கு முதல் ஐந்தாயிரம் ரூபாய் செலவு ஆகும்.

4 /5

கசோல் மினி இஸ்ரேல் என்றும் அழைக்கப்படுகிறது. கசோலுக்கு ஏராளமான இஸ்ரேலிய குடிமக்கள் வருகிறார்கள். இஸ்ரேலிய கலாச்சாரத்தையும் கசோலில் பார்க்கலாம். நீங்கள் சாகசத்தை விரும்பினால், உங்களுக்கு ஏற்ற ஸ்பாட் இது 

5 /5

கசோலில் பார்வதி நதி ஓடுகிறது. ஆற்றின் கரையில் உள்ள கசோல் மற்றும் அடர்ந்த காடுகளில் நீங்கள் மிகவும் ரம்மியமான இயற்கையை ரசிக்கலாம்.