உடல் எடையை குறைப்பதில் கலோரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறைய கலோரிகளை எரிக்கும் திறன் கொண்ட உணவுகள் 'எதிர்மறை கலோரிகள்' (Negative Calories) எனப்படும்.
எதிர்மறை கலோரி உணவுகள் செரிமானத்தை தூண்டி அதிகமான கலோரியை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. இதில் சில உணவுகள் நீர்ச்சத்து நிறைந்தவை. மற்றும் அதிக நார் சத்து கொண்டவை.

எதிர்மறை கலோரி உணவான தக்காளியில் 95% நீரும்,4% கார்போஹைட்ரட் 1% கொழுப்பு, புரதம் உள்ளது. வைட்டமின் சியும் நிறைந்தது.
சுரைக்காய்: சிறந்த எதிர்மறை கலோரி உணவான சுரைக்காய் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நூறு கிராம் சுரைக்காய் பதினெட்டு கிராம் கலோரிகளைக் கொண்டுள்ளது.
பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள கேரட் எதிர்மறை கலோரி கொண்ட ஒரு உணவு ஆகும்.
விட்டமின்கள் சி,கே மற்றும் எ உள்ளது மற்றும் நார் சத்து அதிகமாக உள்ள ப்ரோக்கோலி கலோரிகளை அதிகமாக எரிக்கும் திறன் கொண்டவை.
100 கிராம் வெள்ளரிக்காயில் 95% நீர் உள்ளது. இவை கலோரிகளை அதிக எரித்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. இது ஒரு சிறந்த எதிர்மறை கலோரி உணவாகும்.
ஆப்பிள்களுக்கு அதிக கலோரிகளை எரிக்கும் திறன் உள்ளதோடு, இதய நோய், புற்று நோய் ஆபத்தையும் குறைக்கிறது.