செலவு செய்ய தயங்காத ராசிகள் இவைதான், பணமே தங்காது: நீங்களும் இந்த ராசியா?

சில ராசிக்காரர்கள் அதிகமாக செலவு செய்வார்கள், சிலர் கஞ்சத்தனமாக இருப்பார்கள். சிலர் தங்கள் பணத்தை தங்களுக்காகவும், பிறருக்காகவும் செலவழிக்க தயங்கமாட்டார்கள், சிலரோ தங்களுக்கென்றே சம்பாதிப்பார்கள். சிலர் நண்பர்களுக்கு பணத்தை வாரி வழங்குவார்கள். அதிகமாக பணம் செலவு செய்து, பணத்தை தக்க வைத்துக்கொள்ள தெரியாத சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பணம் சேமிக்க விரும்பினாலும் இவர்களால் அதை செய்ய முடியாது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவர்களின் செலவு குறைவதில்லை. 

1 /4

மேஷ ராசிக்காரர்கள் தங்களை விட நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். பலர் இவர்களது இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் இதயம் மென்மையானது. இவர்கள் அனைவரிடமும் மிக விரைவாக இரக்கம் கொள்கிறார்கள். 

2 /4

இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகம் செலவு செய்யும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை அதிகரிக்க அதிகம் செலவழிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ விரும்புகிறார்கள். வாழ்க்கைத் தரத்தில் சிறு குறை இருந்தாலும் இவர்களுக்கு பிடிக்காது. கடக ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதிகமாக உதவும் இயல்புடையவர்கள். தங்கள் நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிக்கிறார்கள். இவர்களுடைய இந்த பழக்கத்தை பயன்படுத்தி, சிலர் இவர்களை ஏமாற்றுவதும் உண்டு. 

3 /4

இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் பணத்தை சேமிக்க இவர்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தனுசு ராசிக்காரர்கள் பணத்தை சேமிக்க நினைத்தாலும், அப்படி செய்வதில் அவர்கள் அரிதாகவே வெற்றி பெறுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. ஆனால் அவர்களால் தங்களுக்கென பணத்தை ஒதுக்கி வைக்க முடிவதில்லை. 

4 /4

இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகம் செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் செலவுகள் எப்போதும் அவர்களின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும். அவர்கள் சம்பாதிப்பதைத் தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் செலவழித்து விட்வார்கள். மீன ராசிக்காரர்களின்பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆனால், அதிக பணம் செலவழிப்பதால், அவர்களால் பெரிய செல்வந்தர்களாக மாற முடிவதில்லை. அவர்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி செய்தாலும் சிலரே அதில் வெற்றி பெறுகிறார்கள்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)