நடிகர் விஜய் இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாகவும், எப்போதும் இளமையாகவும் இருப்பதை கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் தினமும் காலை 9 மணியளவில் இரண்டு இட்லி மற்றும் முட்டைகளுடன் தனது காலை உணவை எடுத்துக்கொள்கிறார்.
மதியம் சரியாக 1 மணிக்கு வீட்டில் சமைத்த உணவுகளுடன் காய்கறி மற்றும் பழங்களை மதிய உணவாக எடுத்து கொள்கிறார்.
இரவு உணவை பொறுத்தவரை சரியாக 7 முதல் 7:30 மணிக்குள் ஏதேனும் ஒரு மென்மையான உணவை எடுத்துக்கொள்கிறார். இடைப்பட்ட நேரத்தில் பசிக்கும்பொழுது அவர் ஏதேனும் ஒரு சாலட்டை சாப்பிடுகிறார் மற்றும் இவரது டயட்டில் ஜங்க் புட்ஸ்களுக்கு இடமில்லை.
தினசரி கார்டியோ போன்ற உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருகிறார். மேலும் உடற்பயிற்சி செய்யமுடியாத சமயத்தில் இவர் நடைப்பயிற்சியை தவறாமல் செய்கிறார்.