Vitamin K: சைவம் சாப்பிடுபவர்களுக்கு சிறந்த உணவுகள்! வைட்டமின் கே ஊட்டச்சத்தின் புதையல்

Nutrient Rich Food: உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்றாலும் எந்த உணவு சிறந்தது என்பதற்கான கருத்து வேறுபாடு முடிவுக்கு வருவதேயில்லை. ஆனால், சைவ உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் தருவது நல்லது என்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.

வைட்டமின் K நிறைந்துள்ள ஐந்து சைவ உணவுகளை தெரிந்துக் கொள்வோம். இவை உங்கள் உணவை வளப்படுத்தவும் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுபவை...

1 /7

வைட்டமின் K இன் குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம், தமனிகள் மற்றும் பிற மென்மையான திசுக்களின் கால்சிஃபிகேஷனை ஊக்குவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

2 /7

ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை ஏற்பட வைட்டமின் கே பற்றாக்குறை காரணமாகலாம். எனவே, வைட்டமின் கே உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

3 /7

ஊட்டச்சத்துக்கள் அடங்கிய மருத்துவப் புதையல் என்று காலே கீரையைச் சொல்லலாம். வைட்டமின் K இன் சைவ ஆதாரங்களில் காலே முக்கியமானது. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள இந்தக் கீரையை ஸ்மூத்தி அல்லது சாலடாக சேர்த்துக் கொள்ளலாம்.  

4 /7

வைட்டமின் கே மூலங்களில் முக்கியமான ஒன்று அவகேடா பழம். இலை கீரைகளில் இருக்கும் அளவு இல்லாவிட்டாலும், கணிசமான அளவு வைட்டமின் கே சத்தை இது வழங்குகிறது.

5 /7

முளைகட்டிய பயறு வகைகள், பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருக்கின்றன. இவற்றீல் வைட்டமின் கே சத்தும் அதிக அளவில் உள்ளது

6 /7

வைட்டமின் K இன் சிறந்த சைவ ஆதாரமாக உள்ள பசலைக்கீரையில் வைட்டமின் கே சத்து தாராளமாக உள்ளது. உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதும் எளிது. இதில் வைட்டமின் கே மட்டுமல்ல, இரும்புச்சத்து உள்ளிட்ட வேறு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்தது பசலைக்கீரை    

7 /7

வைட்டமின் கே அதிகம் கொண்ட ப்ரக்கோலி, கணிசமான அளவு வைட்டமின் கே மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வேகவைத்தாலும், வறுத்தாலும் அல்லது சமைத்தாலு,ம் ப்ரோக்கோலி உங்கள் சைவ வைட்டமின் கே மூலங்களுக்கு அற்புதமான தேர்வாக இருக்கும்