பிச்சைக்காரன் 2 விபத்து என்னை வலிமையாக்கியுள்ளது - விஜய் ஆண்டனி!

புதன்கிழமை நடைபெற்ற பிச்சைகாரன்-2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பேசியுள்ளார்.

 

1 /7

விஜய் ஆண்டனி தற்போது அவரே இயக்கி, நடித்து, இசையமைக்கும்  'பிச்சைகாரன்-2'  படம் மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.    

2 /7

"நான் ஒரு படத்தை இயக்கத் திட்டமிடவில்லை, நான் படத்திற்கான கதையை எழுதி அதனை சசி சாரிடம் கொண்டுபோய் கொடுத்தேன், ஆனால் அவர் அந்த சமயத்தில் வேறொரு திட்டத்தில் பிஸியாக இருந்தார்.  அதன் பின்னர் நான் மற்றொரு இயக்குநரிடம் அணுகினேன், அவரால் இந்த படத்தை எடுக்கமுடியவில்லை.  உடனே நானே இந்த படத்தை இயக்க முடிவு செய்து, அதன்படி இயக்குனராக மாறிவிட்டேன் என்று கூறினார்.

3 /7

மேலும் 2016-ம் ஆண்டு வெளியான 'பிச்சைகாரன்' படத்தின் தொடர்ச்சி 'பிச்சைக்காரன் 2' அல்ல என்பதையும் விஜய் ஆண்டனி தெளிவுபடுத்தி இருக்கிறார்.  'பிச்சைக்காரன்' படம் தாய்-மகன் உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாகக் கொண்டிருந்தது ஆனால் 'பிச்சைகாரன்-2' படம் அண்ணன்-தங்கை உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.   

4 /7

'பிச்சைக்காரன்-2' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடத்தப்பட்ட போது எதிர்பாராத விஜய் ஆண்டனி ஒரு விபத்தில் சிக்கி கொண்டார்.  விபத்தில் சிக்கி கொண்ட விஜய் ஆண்டனியின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை நினைத்து அவரது ரசிகர்கள் சோகமாக இருந்து வந்தனர்.  

5 /7

விபத்து குறித்து அவர் கூறுகையில், பொதுவாக ஆக்‌ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் செய்யும் போது விபத்துகள் அதிகம் நடப்பது இயல்பு தான், ஆனால் ஒரு காதல் பாடல் படப்பிடிப்பின் போது நான் விபத்துக்குள்ளானேன்.  ஜெட் ஸ்கீயிங் செய்யும் போது எனது பைக் ஒளிப்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இருந்த மற்றொரு பைக்கின் மீது வேகமாக மோதிவிட்டது.  அந்த விபத்தில் எனக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.  

6 /7

இப்போது எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது, இந்த விபத்திற்குப் பிறகு நான் மனதளவில் பலசாலியாக இருப்பதாக உணர்கிறேன்.  நான் ஒரு புதிய நபராக மாறியது போல உணர்கிறேன், வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்கும் அளவிற்கு எனக்கு அதிக நம்பிக்கை கிடைத்துவிட்டது போன்று நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.  

7 /7

எதிர்காலத்தில் தான் இயக்கப்போகும் படங்களில் மற்ற நடிகர்களை வைத்து இயக்க விரும்புகிறேன்.  நான் நடுத்தர நடிகனாகவே இருப்பதால் எனக்கு பெரிய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வரவில்லை.  எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஸ்கிரிப்ட்களை மட்டுமே தேடிக்கொண்டிருக்கிறேன், ஆரம்பத்தில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்தால், புதுமுகங்கள் நிறைய பேருக்கு வாய்ப்பளித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.