மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்! ரசிகர்கள் சத்தத்தில் அதிரும் அரங்கம்!

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

 

1 /5

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.  

2 /5

'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேச போகிறார் என்பதை காண்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.  

3 /5

'வாரிசு' படத்தின் வெளியீட்டு விழாவிற்கான அனுமதி சீட்டு ஒன்றின் விலை சுமார் ரூ.4000 வரை விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

4 /5

இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன, இதில் ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று அனைத்து பாடல்களும் வெளியாகும்.  

5 /5

ரசிகர்கள் கூட்டம் சூழ அரங்கம் மட்டுமல்லாது அந்த பகுதியே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.