இது புலியா, பூனையா: தனது எஜமானரை காக்க பாம்புடன் சண்டையிட்ட பூனை

Cat Fight With Cobra: வீட்டு விலங்குகள் எஜமனார்களுக்கு விசுவாசமாக இருக்கும் என்பதை நாம் பல வகைகளில் பார்த்திருக்கிறோம்.  அதிலும் நாய்கள் பற்றி அதிகம் கேள்விப்ப்ட்டிருக்கிறோம். ஆனால், இங்கே நாம் ஒரு பூனையில் விசுவாசம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒடிசாவின் புவனேஸ்வரில், பூனை, தனது எஜமானரின் உயிரைக் காப்பாற்ற நாகத்துடன் சண்டையிட்டது. நாக பாம்பை எஜமானரின் வீட்டிற்குள் செல்ல பூனை அனுமதிக்கவில்லை. இரண்டுக்கும் இடையிலான சண்டை சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்தது. ஆனால் பூனை பயப்படாமல் போரிட்டது

1 /5

பூனை மற்றும் நாக பாம்பு இடையேயான சண்டை  சம்பவம் புவனேஸ்வரில் உள்ள பீமதங்கி பகுதியில் நடந்தது. இந்த துணிச்சலான பூனை சம்பத் குமார் பரிதாவின் பூனை. குடும்ப உறுப்பினர்கள் அன்புடன்  சினு என்ற பெயரில் அழைக்கிறார்கள். சினு தனது எஜமானர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றி தனது விசுவாசத்தை நிரூபித்துள்ளது.

2 /5

சம்பத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து நாகம் வீட்டிற்குள் நுழைய முயன்றது. அதை பார்த்த  பூனை நாகப்பாம்பை உள்ளே வர விடாமல் தடுத்து சண்டையிட்டது.  நாகத்திற்கும் இடையில் சண்டை தொடங்கியது. நாகம் பூனையைத் தாக்கியது, ஆனால் பூனை தைரியமாக அதை எதிர்கொண்டது. பூனை 30 நிமிடங்கள் நாகத்துடன் சண்டையிட்டது. இதற்கிடையில், பூனையின் உரிமையாளர் பாம்பை பிடிப்பவரை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு அழைத்தார். 

3 /5

பாம்பை பிடிப்பவர்  வரும் வரை பூனை அதன் இடத்திலிருந்து நகரவில்லை. அது தொடர்ந்து நாகம் மீது ஒரு கண் வைத்திருந்தார், அதை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. (புகைப்படம்- ANI)

4 /5

1.5 ஆண்டுகளுக்கு முன்பு சினு என்ற பூனையை அழைத்து வந்து வளர்த்தோம்.  எங்கள் குடும்பத்தில் ஒருவராக உள்ள சினு ,எங்கள் உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றியுள்ளது. நாகம் வீட்டிற்குள் நுழைந்திருந்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம் என பூனையின் எஜமானர் தெரிவித்தார்

5 /5

மழைக்காலங்களில்  ​​பாம்புகள், தேள் மற்றும் பிற உயிரினங்கள் அவற்றின் புற்றுகளில் இருந்து வெளியே வருகின்றன. 

You May Like

Sponsored by Taboola