தமிழ்நாட்டைச் சேர்ந்த 1971 பங்களாதேஷ்-விடுதலைப் போர் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்திய ராணுவம், பெருமைப்படுத்தியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,670 ஆண்களும் பெண்களும் பங்களாதேஷ் விடுதலைப் போரின்போது இந்தியாவின் ஆயுதப் படைகளுடன் இணைந்து பணியாற்றினர். 1670 இல், 42 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 37 பேர் காயமடைந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 3 வீர் சக்ரா விருது பெற்றவர்கள், 1 மகாவீர் சக்ரா விருது பெற்றவர் மற்றும் 1 சேனா பதக்கம் பெற்றவர்கள் உள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்பது போர்வீரர்கள் மற்றும் மூன்று தியாகிகளின் மனைவிகள் (போரில் கணவனை இழந்த பெண்கள்) கெளரவிக்கப்பட்டனர்.
Also Read | Flame of Victory கன்னியாகுமரிக்கு வந்தது; 1971 போர் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்
ராணுவம் உயரதிகாரிகள் மற்றும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு மரியாதை செய்தனர்.
1971 போரில் முக்கிய பொறுப்புகளை வகித்த மூவர் உயிருடன் இருக்கின்றனர். கமாண்டர் கோபால் ராவ் கராச்சி துறைமுகத்தை முடங்கச் செய்தவர். எதிரி தங்கள் விமானநிலையங்களை இயக்குவதைத் தடுத்தவர் கடற்படை விமானி ரியர் அட்மிரல் எஸ் ராம் சாகர். இந்திய ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கப்பலை வழிநடத்திய கர்னல் கிருஷ்ணசாமி. இவர்கள் மூவரும் இன்றும் பிறருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்பது போர்வீரர்கள் மற்றும் மூன்று தியாகிகளின் மனைவிகள் (போரில் கணவனை இழந்த பெண்கள்) கெளரவிக்கப்பட்டனர்.