வருமான வரியில் 46,800 சேமிக்க வேண்டுமா? இதோ Tips

வருமான வரியை எவ்வாறு சேமிப்பது? என்பது வருமான வரி தாக்கல் செய்யும் அனைவரும் எப்போதும் கேட்கும் கேள்வி. இதற்கான பதிலை பலரும் பலவிதமாக சொல்வார்கள். பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்படி நடப்பது இந்த விஷயத்தில் சரியாக இருக்கும்.  46,800 ரூபாய் வரை வருமான வரியை சேமிக்க பொருளாதார நிபுணர்கள் சொல்லும் வழிமுறைகள் உங்களுக்காக…  

புதுடெல்லி: வருமான வரியை எவ்வாறு சேமிப்பது? நீங்கள் முதலீட்டு சான்றுகளை உங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டுமா?  டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் தளம் (Digital payments platform), ஃபோன்பே (PhonePe), பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய (industry-leading tax-saving mutual funds) ஒரு விருப்பத்தை வழங்குகிறது.

வரி செலுத்துவோருக்கு இந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதிகள் கவர்ச்சிகரமானவை. இவற்றின் lock-in period   மூன்று ஆண்டுகள். கடந்த கால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, இந்த நிதிகள் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது அதிக வருமானத்தை அளிக்கின்றன. ஆக்சிஸ் (Axis), ஆதித்யா பிர்லா சன் லைஃப் (Aditya Birla Sun Life), டிஎஸ்பி (DSP), டாடா (Tata), எஸ்பிஐ (SBI), மற்றும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் (ICICI Prudential) ஆகியவற்றுடன் PhonePe கூட்டு சேர்ந்துள்ளது.

Also Read | WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் Supreme Courtஇல் மனு

இங்கே, PhonePe செயலியில் முன்னணி வரி சேமிப்பு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் வரியைக் குறைக்க உதவும் வழிகாட்டு நெறிமுறைகள் இவை: 

 

1 /6

படி 1: PhonePe செயலியைத் திறந்து முகப்புப்பக்கத்தின் கீழே உள்ள ‘My Money’ என்ற பிரிவை கிளிக் செய்யவும்  

2 /6

படி 2: முதலீடுகள் பிரிவின் கீழ் உள்ள ‘See all’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Investments category கீழ் உள்ள ‘Tax-Saving Funds’ என்பதைக் கிளிக் செய்க

3 /6

படி 3: நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் வரி சேமிப்பு நிதியைத் தேர்ந்தெடுத்து, ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்

4 /6

படி 4: முதலீட்டுத் தொகையை உள்ளிட்டு, முதலீட்டு வகையைத் தேர்வுசெய்க (ஒரு முறை அல்லது மாதாந்திர SIP) மற்றும் ‘Invest Now’ என்பதைக் கிளிக் செய்யவும்

5 /6

படி 5: நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து பரிவர்த்தனையை முடிக்க ‘Pay’ என்பதைக் கிளிக் செய்க.

6 /6

படி 6: வாழ்த்துக்கள்! நீங்கள் முதலீடு செய்து உங்கள் வரிப் பொறுப்பைக் குறைத்துவிட்டீர்கள்.   (10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும், 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் செய்யும் முதலீடுகள் என்பதன் அடிப்படையிலும், முதலீட்டாளர் 30% வரி விகிதம் (பழைய வரி விதிப்படி) மற்றும் 4% செஸ் என்பதன் அடிப்படையில் * 46,800 ரூபாய் சேமிப்பு என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.