Weight Loss Diet: உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சில இயற்கையான பானங்களை குடிப்பதன் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உடம்பை குறைக்கலாம்.

 

1 /5

சீரகம் பொதுவாக அனைவரது வீட்டிலும் இருக்கும், குறைந்த கலோரிகள் கொண்ட இந்த சீராக தண்ணீர் செரிமானத்தை ஊக்குவித்து வயிற்று பகுதிகளில் கொழுப்புகள் படிவத்தை தடுக்கிறது.  இது உடல் எடையை குறைக்க சிறந்த பானமாக கருதப்படுகிறது.  

2 /5

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் அவர்களது டயட்டில் கிரீன் டீயை சேர்த்து கொள்கின்றனர், இது நமது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து எடை இழப்புக்கு உதவுகிறது.  இந்த டீயில் இனிப்பு சேர்க்காமல் குடிப்பது கூடுதல் பலனை தரும்.  

3 /5

ஓமம் உங்கள் உடலிலுள்ள கொழுப்புக்களை கரைக்கும் வித்தையை செய்கிறது.  இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமான மண்டலத்தை தூண்டுகிறது.  2 டீஸ்பூன் ஓமத்தை வறுத்து இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் அதனை பருக உடல் எடை குறையும்.   

4 /5

டீடாக்ஸ் நீர் குடிப்பது உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை மளமளவென குறைக்கிறது.  வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா இலைகள் சேர்த்து இந்த நீரை தயாரிக்க வேண்டும், மேலும் கூடுதல் சுவைக்காக இதில் ஆப்பிள் மற்றும் இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.  

5 /5

சீரகத்தை போலவே சோம்பு பல வீடுகளிலும் இருக்கும்.   முதல் நாள் இரவு சோம்பை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உடல் எடை குறையும்.