Weight loss mistakes: எடை இழப்புக்கு நிறைய அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மை தேவைப்படுகிறது. இந்த தவறுகள் உங்கள் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்
எடை இழப்புக்கு நிறைய அர்ப்பணிப்பு மற்றும் நிலையான செயல்பாடுகள் அவசியமானது. எடை இழப்பு பயணத்தின் தொடக்கத்தில் எடையைக் குறைப்பது பொதுவாக எளிதானது, ஆனால் பின்னர் அந்த முயற்சியில் தொய்வு ஏற்படத் தொடங்கலாம்
உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் நீங்கள் என்ன உட்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கலோரிகளைக் குறைப்பதன் மூலம் பசி குறையாது. எனவே என்ன சாப்பிடுவது என்பது இது உங்கள் எடை இழப்பு பயணத்தில் முடிவு செய்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று
உங்கள் உடலுக்கு ஏற்ற அளவு உணவு உண்பதை தவிர்க்க வேண்டாம்
உணவை தேவைக்கு அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும் என்பதுபோல, தேவைக்கு குறைவாக உண்பதும் உடல் எடை பயணத்தை தடை செய்யும் ஒரு தவறான பழக்கம் ஆகும்
உண்ணும் உணவின் கலோரிகள் பற்றிய அதிக சிந்தனை, எதிர்மறையான விளைவுகளையேத் தரும்
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது உடலை விரைவில் சோர்வடையச் செய்யும், அதோடு உணவுக் கட்டுப்பாடும் சேர்ந்துக் கொண்டால், மன உறுதி குறைந்துவிடும்
அதிக சோர்வடைந்தால், அதிக உறக்கம் வரும், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், பரிந்துரைக்கப்பட்டதை விட அதிக அளவில் உறங்கினால், அது உடல் எடை குறைப்பு பயணத்தை மந்தமாக்கும்.