உடல் எடையை உடனே குறைக்கணுமா? உணவில் இதையெல்லாம் சேருங்க

Weight Loss Diet: பலர் உடல் எடையை குறைக்க உணவின் அளவை குறைத்து விடுகிறார்கள். ஆனால், எடையை குறைக்க உணவை குறைக்கும் இந்த முறை சரியானது அல்ல. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அதனுடன் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமாக சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க நாம் செய்யக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

பயத்தம் பருப்பில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புரதமும் நல்ல அளவில் உள்ளது. இதனை உண்பதால் உடலுக்கு ஊட்டம் கிடைக்கும். பயத்தம் பருப்பு கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.  

2 /5

ராகி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ராகியில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடல் எடையை குறையக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க ராகியை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ராகியின் பல வகையான உணவுகளை காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றுக்கு உட்கொள்ளலாம். 

3 /5

முட்டை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் தங்கி நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்காது. உடல் எடையை குறைக்க முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனெனில் அதில் கூடுதல் கொழுப்பு இல்லை.

4 /5

பழங்கள் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகின்றன. உடல் எடையை குறைக்க, எண்ணெய் கலந்த காலை உணவுக்கு பதிலாக, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

5 /5

பால் முழுமையான உணவாகும். இதை குடிப்பதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பூர்த்தியாகும். பால் உடலில் கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகிறது. இதன் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும். தயிர், மோர் போன்ற பால் பொருட்களையும் காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம். பாலின் காரணமாக வயிறும் எப்போதும் நிரம்பியே இருக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)