Weight Loss Tips: உடல் எடை குறைய ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்

ஆரோக்கியமான, சுவையான மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து சுலபமாக தயாரிக்கக்கூடிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

1 /5

கினோவா (Quinoa) என்பது முழு தானியமாக கருதப்படுகிறது. ஆனல் இது ஒரு விதை. இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை அர்சியை போலவே சமைக்கலாம்

2 /5

கொண்டைக்கடலை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு இது நல்லது. கொண்டைக்கடலையிலும் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை சுண்டலாக செய்து சாப்பிடலாம்.

3 /5

காலிஃபிளவர் காளான் டகோஸ் (Cauliflower Mushroom Tacos) ஒரு மெக்சிகன் உணவாகும். நல்ல சுவையுடனும், உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது. இது எடை இழப்பிற்கு உதவும்.

4 /5

அதிக புரதம் கொண்ட முட்டை மற்றும் கீரையுடன் தயாரிக்கப்படும் முட்டை உணவு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மத்திய தரைக்கடலில் பிரபலமான உணவு.

5 /5

கிரேக்க பருப்பு சூப்பில் (Greek lentil soup) புரதம் நிறைந்துள்ளது. இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.