உடல் பருமனால் தொல்லையா? பனீர் இருக்க பயம் ஏன்? இப்படி சாப்பிடுங்க.. சட்டுனு குறையும்

Paneer For Weight Loss: உடல் எடை அதிகரிப்பு இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. இது ஒரு பொதுவான பிரச்சனை ஆகி விட்டது. 

உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை செய்கிறார்கள். சிலர் ஜிம்மில் மணிக்கணகில் செலவிடுகிறார்கள். சிலர் கடுமையான டயட்டிங்கை பின்பற்றுகிறார்கள். ஆனால், பல வித முயற்சிகளை எடுத்தாலும் வேண்டிய பலன் கிடைப்பதில்லை. ஆகையால்தான் சிலர் உடல் எடையை குறைப்பது உலகின் மிக கடினமான பணி என கருதுகின்றனர். ஆனால் அது அப்படி அல்ல. உடல் எடையை குறைக்க ஒரு இயற்கையான, எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

எடையை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் உணவு முறையை சரியான முறையில் கையாள்வது பலருக்கு தெரிவதில்லை. எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை சிறிய அளவில் சாப்பிட்டால் உடல் எடையில் பாதிப்பு ஏற்படாது என நினைக்கிறார்கள். ஆனால், இது எடை இழப்பு செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். 

2 /8

எடை இழப்புக்கு அதிக பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்வது முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 'பனீர்' உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பனீர் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி அல்ல!! பனீர் உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் மிகவும் நன்மை பயக்கும்.

3 /8

புரதத்தின் சிறந்த மூலம்:  100 கிராம் பனீரில் சுமார் 11 கிராம் புரதம் உள்ளது. உடல் எடையை குறைப்பவர்கள் தங்கள் உணவில் புரதம் நிறைந்த உணவை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் புரோட்டீன் நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப வைத்திருக்கிறது. 

4 /8

குறைந்த அளவு கலோரி, குறைந்த கார்போஹைட்ரேட்: பனீரின் ஒரு சிறப்பு என்னவென்றால், அதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவு. இருப்பினும், பனீர் முழு கொழுப்புள்ள பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றால், அந்த பனீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளின் அளவு அதிகமாக இருக்கலாம். 

5 /8

ஆரோக்கியமான கொழுப்பு: பனீரில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமான கொழுப்பு. இதில் நிறைவுற்ற கொழுப்பின் அளவு மிகக் குறைவு. நிறைவுற்ற கொழுப்பு உடல் எடையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

6 /8

சத்துக்கள் நிறைந்தது: பனீரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. பனீரை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகள் உடலுக்குக் கிடைக்கும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

7 /8

உடல் எடையை குறைக்க பனீர் சாப்பிடுவது எப்படி? உடல் எடையை குறைக்க பனீரை பச்சையாக சாப்பிடலாம், சாலட்டில் கலந்து சாப்பிடலாம் அல்லது காலை உணவாக சாப்பிடலாம்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.