தேநீர் பிரியர்கள் பலரும் இருக்கையில், சில வகையான தேநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்கிற செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.
எடை குறைப்பு என்று வந்ததுமே முதலில் நம் நினைவுக்கு வருவது க்ரீன் டீ தான். க்ரீன் டீயில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவும் ஃபிளவனாய்டுகள் உள்ளது. எனவே உடல் எடை குறைப்பில் க்ரீன் டீ சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
குறைந்த பதப்படுத்தப்பட்ட தேயிலை வகைகளில் ஒன்றுதான் ஒயிட் தேயிலை. இந்த உயிர் தேயிலையை வைத்து தயாரிக்கப்படும் ஒயிட் தேநீர் கொழுப்புகளை கரைக்கவும், புதிய கொழுப்பு செல்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.
காமெலியா சினென்சிஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் இலையை கொண்டு தயாரிக்கப்படும் ஊலாங் தேநீர் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.
பிரபலமாக பலரும் பருகும் பிளாக் டீ உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. பிளாக் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது.
உடல் எடை குறைப்பில் செம்பருத்தி தேநீரும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தேநீர் குடிப்பதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.