Garlic For Weight Loss: உடல் எடையை குறைப்பது பலருக்கு பிரம்ம பிரயத்னமாக இருந்து வருகிறது. மிக எளிதாக அதிகரிக்கும் எடை குறைவதற்கு பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
நாம் தினமும் உட்கொள்ளும் சில உணவுகளே எடையை குறைக்க உதவுகின்றன. அதில் முக்கியமானது பூண்டு (Garlic). பூண்டை பயன்படுத்தி உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை எளிதாக குறைக்கலாம். உடல் பருமனை குறைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது என இந்த பதிவில் காணலாம்.
பூண்டு உணவில் சுவையை சேர்ப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் பல வித நன்மைகளை அளிக்கின்றது. இதில் நம் உடல் நலனில் பங்களிக்கும் பல கூறுகள் உள்ளன.
வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதன் மூலம் நமது வளர்சிதை மாற்றம் மேம்படுகின்றது. இதனால் எடையை குறைப்பதில் அதிக நன்மை கிடைக்கின்றது. மேலும் இதன் மூலம் தொப்பை கொழுப்பையும் (Belly Fat) குறைக்கலாம்.
நாள் முழுவதும் பூண்டை ஊறவைத்த நீரை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுகள் நீங்கும். இது நமது செரிமானத்தை சீராக்கி, எடை இழப்பில் (Weight Loss) உதவும். மேலும் இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
நமது பல்வேறு உணவு வகைகளில் பூண்டை சேர்ப்பதால், உணவின் சுவை அதிகரிப்பதோடு நாள் முழுவதும் நமது வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கின்றது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.
பல வித காய்கறிகளுடன் பூண்டையும் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம். இதன் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதுடன் உடலும் நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
பூண்டை நசுக்கி போட்டு தேநீர் செய்து குடிக்கலாம். இதன் மூலம் செரிமானம் சீராகும், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும், கூடுதல் கொழுப்பு கரையும், எடை இழப்பில் உதவி கிடைக்கும்
பூண்டை தேனுடன் கலந்து உணவு உட்கொள்ளும் முன் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.