Healthy Eating For Health: பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகிறது
ஆரோக்கியத்திற்கு அடிப்படையான உணவை ஏனோதானோவென்று தேர்ந்தெடுக்காமல், கவனத்துடன் தேர்ந்தெடுத்து உண்பது உடல்நலனுக்கு நல்லது
யார் பணக்காரர்கள் என்ற கேள்வி கேட்டதும், வங்கி இருப்பு அல்லது சொத்துக்களின் மதிப்பு நினைவுக்கு வருவதைவிட ஆரோக்கியம் என்ற பதில் வருவது தான் சரியானதாக இருக்கும். உண்மையில் நிம்மதியைத் தருவது செல்வத்தை விட, ஆரோக்கியம் தான்...
உணவுக்கு சரியாக செலவளித்துவிட்டால், மருத்துவருக்கு செலவு செய்ய வேண்டியதில்லை என்று பழமொழியே உண்டு. உண்மையில், ஆரோக்கியமான உணவுக்கு செய்யும் செலவு மட்டுமே ஆரோக்கியமானது என்பதை பலர் புரிந்துக் கொள்வதில்லை
நமது தினசரி உணவு சமச்சீரானதாக இருக்க வேண்டும். போதுமான வைட்டமின்கள் கொண்ட உணவாக தேர்ந்தெடுத்து உண்பது நலல்து. செயற்கையாக அல்ல, இயற்கையாகவே உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்களே உடலுக்கு நல்லது
அசைவ உணவுக்காரர்களை பொருத்த அளவில், புல் உண்ணும் விலங்குகளின் இறைச்சியை பிரதானமாக கொள்ளலாம். இவற்றில் புரதம் முதல் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன
பச்சை காய்கறிகளைப் போன்றே வேர் காய்கறிகளையும், அதாவது, பூமிக்கு அடியில் விளையும், உருளைக்கிழங்கும், கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்
எல்லா சுவையுள்ள பழங்களையும் உண்ணலாம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பழங்களில் நவரசங்களும் நிறைந்துள்ளன.
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்த வெண்ணெய் மற்றும் நெய் உணவில் இடம் பெற வேண்டும். வெண்ணெய் மற்றும் நெய் இரண்டுமே மூளை ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு அவசியமானவை
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சமைத்த காய்கறிகள் செரிமானத்திற்கு அவசியமானவை. அவை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.