Foreign Countries That Speaks Tamil : இந்தியா, தமிழகத்தை தவிர பிற வெளிநாடுகளிலும் தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Foreign Countries That Speaks Tamil : தமிழ் மொழிக்கு இருக்கும் தொன்மை குறித்து தமிழர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். தமிழகத்தில் பிறந்ததால், தமிழ் நாட்டில் இருப்பதால் பலர் தமிழை கற்று, அதிலேயே பயின்று சாதித்து வருகிறோம். தமிழகத்தை போல, வெளிநாடுகளிலும் கூட தமிழ் பேசும் மக்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அப்படி, தமிழகர்கள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
தென் ஆப்ரிக்கா: சில தமிழர்கள் வேலைக்காக தென் ஆப்ரிக்காவிற்கு 19ஆம் நூற்றாண்டுகளில் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள், ஆங்கிலேயர்களால் அங்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். அதனால், இப்போது அங்கிருக்கும் டர்பன் என்ற இடத்தில் தமிழர்கள் நிறைய பேர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா: அமெரிக்காவின் நியூ யார்க், நியூ ஜெர்சி, கலிஃபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் தமிழ் பேசுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனராம். இங்கு அடிக்கடி, தமிழ் விழாக்கள் நடத்தப்படுமாம். இங்கிருக்கும் தமிழ் கோவில்களை பராமரிக்கவும் சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனவாம்.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனராம். இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் இங்கு அதிகம் பேர் இருக்கின்றனராம்.
இங்கிலாந்து: இங்கிலாந்தில் (UK) தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனராம். இங்கிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கனடா: கனடா நாட்டில், டொரோண்டோ மற்றும் மாண்ட்ரியல் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனராம். இங்கு பெரும்பாலும் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மலேசியா: ஆங்கிலேயே ஆட்சி காலத்தில், தமிழ் பேசும் மக்கள் பலர் மலேசியாவிற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர். அவர்களின் வம்சாவளியில் வந்தவர்கள் இன்னும் அங்கு வசித்து வருகின்றனர். இங்கு, சில பள்ளிகள் கூட தமிழ் பெயரில் இயங்கி வருகிறதாம்.
சிங்கப்பூர்: தமிழர்கள் அதிகம் பேர் வாழும் இன்னொரு நாடு, சிங்கப்பூர். அங்கிருக்கும் 4 அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது தமிழ். அது மட்டுமன்றி, அந்த நாட்டின் அரசாங்கமே தமிழ் மொழியை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை: இலங்கையில், சிங்கள மொழிக்கு அடுத்து பேசப்படும் மொழியாக இருக்கிறது தமிழ். இங்கு, தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.