Foreign Countries That Speaks Tamil : இந்தியா, தமிழகத்தை தவிர பிற வெளிநாடுகளிலும் தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக நலன் மற்றும் இலங்கை தமிழர் நலன் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை திமுக எம்.பி-க்கள் பிரதமரிடம் வழங்கினர்.
தமிழ் மொழி அறியாதவர்களை பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது பிற மொழியை பாஜக திணிக்கிறது எனக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 174 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் காஜூபேட்டையில் செம்மரம் வெட்டச்சென்றதாக 16 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பனையில் லங்கமல்லாவில் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 174 தமிழர்கள் செம்மரம் வெட்டச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு, ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக மக்களின் தொடர் பிராத்தனைகளாலும் வேண்டுதல்களாலும் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் நான்கு தொகுதிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் தீப ஒளி திருநாளான இன்று பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தும், கோவில்களில் தீபம் ஏற்றியும் சுவாமியை வழிப்பட்டனர். வாழ்வில் இருள் நீங்கி வளமான வாழ்வு அமைய வேண்டி உற்றார் உறவினர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.