சூப்பர் லாபம் தரும் பென்னி ஸ்டாக்! உச்சத்தில் இந்தியப் பங்குச் சந்தை! டிரெண்டிங்

Trending Penny Stocks: ஒரு பங்கு, அதன் மேல் சர்க்யூட்டைத் தொடும் போது, ​​அந்த குறிப்பிட்ட பங்கின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையில் வாங்குவதைத் தடுக்கும்.

பங்குச் சந்தையில் ஒரு வர்த்தக அமர்வில் ஒரு பங்கின் விலையில் அதிகபட்ச சதவீத அதிகரிப்பு அப்பர் சர்க்யூட் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கொடுக்கும் பென்னி பங்குகள் ஆச்சரியம் அளிக்கின்றன.  

1 /7

இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.41 சதவீதம் உயர்ந்து 71,733.15 ஆகவும், நிஃப்டி 0.44 சதவீதம் அதிகரித்து 21,548.10 ஆகவும் வர்த்தகமானது. அதில் பங்குச் சந்தையில் பென்னி பங்குகள் நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளன

2 /7

சென்செக்ஸ் 0.41 சதவீதம் உயர்ந்து, 71,733.15 என்ற புதிய வரலாற்றை எட்டியது. இதேபோல், நிஃப்டி 0.44 சதவீதம் அதிகரித்தது, நிஃப்டி மிட்-கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்-கேப் ஆகியவை முறையே 0.69 சதவீதம் மற்றும் 0.84 சதவீதம் உயர்ந்தன.இந்தியா VIX 1.37 சதவீதம் ஓரளவு உயர்ந்துள்ளது. இது சந்தை ஏற்ற இறக்கத்தில் அதிகரிப்பைக் குறிக்கிறது. 

3 /7

விலை குறைவாக இருக்கும் பங்குகளை Penny Stock என்று அழைப்பார்கள். இந்திய பங்குச்சந்தையில், 10 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பங்குகளை பென்னி பங்குகள் என்று அழைக்கிறார்கள். 

4 /7

இந்தியப் பங்குச் சந்தையில், தீவிர விலை நகர்வுகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் சர்க்யூட் என்பதும் ஒன்று. இந்த சர்க்யூட் ஃபில்டர்கள், பிரைஸ் பேண்ட்கள் என்றும் அழைக்கப்படும், பங்குகள் அதிகமாக வாங்கப்படுவதையோ அல்லது அதிகமாக விற்கப்படுவதையோ தடுக்கும் வகையில் இவை செயல்படுகின்றன  

5 /7

அதிக லாபம் ஈட்டும் துறைகளில் நிஃப்டி ஐடி, நிஃப்டி எனர்ஜி மற்றும் நிஃப்டி மீடியா ஆகியவை அடங்கும்.ஐஷர் மோட்டார்ஸ், எல்டிஐமிண்ட்ட்ரீ மற்றும் டிசிஎஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதே நேரத்தில் எம்&எம், சன் பார்மா மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவை சரிவை கண்டுள்ளன

6 /7

2247 பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 1280 பங்குகள் சரிந்து வருகின்றன. இது ஒட்டுமொத்த சந்தையில் நேர்மறையான போக்கைக் குறிக்கிறது.

7 /7

லாபத்தை பதிவு செய்யும் பென்னி பங்குகள்: பிரகாஷ் ஸ்டீலேஜ் லிமிடெட், ஆம்னி ஆக்ஸ் சாப்ட்வேர் லிமிடெட், லிப்சா ஜெம்ஸ் & ஜுவல்லரி லிமிடெட், ஆல்ஸ்டோன் டெக்ஸ்டைல்ஸ் (இந்தியா) லிமிடெட், சன் ரீடெய்ல் லிமிடெட், ஜிஏசிஎம் டெக்னாலஜிஸ் லிமிடெட், ஜெய் மாதா கிளாஸ் லிமிடெட், ராடான் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட், ராதாகோபிந்த் கமர்ஷியல் லிமிடெட், அர்ஷியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபம் ஈட்டியுள்ளன