விஜய் மனைவி சங்கீதா வாரிசு இசை வெளியீட்டுக்கு வராதது ஏன்?

விஜய் மனைவி சங்கீதா வாரிசு இசை வெளியீட்டுக்கு வராதது ஏன்? என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

 

1 /5

விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்துள்ளார்.

2 /5

வெளியீட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்த நிலையில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட சுமூக உடன்பாடு காரணமாக பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாவது உறுதியானது.

3 /5

இதனைத் தொடர்ந்து வாரிசு இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

4 /5

விஜய்யின் அப்பா சந்திரசேகர், அம்மா சோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை.

5 /5

இது குறித்து பல்வேறு தகவல்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டில் இருக்கும் மகன் மற்றும் மகளுடன் இருப்பதால் அவர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.