10 ஜவான்கள் தங்கும் அளவுக்கு சிறிய கூடாரம் இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்படுகிறது. சூரிய மின்சக்தியால் வெப்பமூட்டப்படும் உலகின் முதல் டெண்ட் என்பது இதன் சிறப்பம்சம். கூடாரத்தின் எடை 30 கிலோவிற்கும் குறைவு. அதோடு, ஒரு நாளுக்குள் முழுமையாக உருவாக்கிவிடலாம் என்பதும் இதன் சிறப்பம்சம்.
அதிக உயரத்தில் பணியமர்த்தப்படும் இந்திய ராணுவ ஜவான்கள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டும். அந்த இடங்களில் மின்சாரம் கிடைக்காது, எனவே, விறகு, மண்ணெண்ணெய் அல்லது டீசல் போன்றவற்றை பயன்படுத்துவதே அவர்களின் முன் இருக்கும் ஒரே வழி. லடாக்கை சேர்ந்த பொறியியலாளரும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக் உலகின் முதல் சூரிய வெப்பமான ராணுவ கூடாரத்தை கட்டியுள்ளார்.
Also Read | மனிதனின் க்ளோனிங்கும் சாத்தியமா என்ற கேள்வி எழுப்பும் அரிய ஆராய்சி!
(All images: Twitter/Sonam Wangchuk)
சோலார் டெண்ட் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வாங்சுக். இவர் தான் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்காக ராணுவ கூடாரத்தை கட்டியுள்ளார். கூடாரத்தில் 10 ஜவான்கள் தங்க முடியும் கூடாரத்தின் எடை 30 கிலோவிற்கும் குறைவாக உள்ளது, மேலும் இது ஒரு நாளுக்குள் மிக விரைவாகவும், முழுமையாக அமைத்துவிடலாம்.
கூடாரம் முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கும் என்றும், மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் போன்ற உறைய வைக்கும் குளிரிலும் கூடாரத்தின் உட்புற வெப்பநிலையை இயல்பாக வைத்திருக்கும் என்று வாங்சுக் கூறுகிறார். அதாவது, -14 டிகிரி வெப்பம் வெளியில் நிலவினாலும், கூடாரத்தின் உட்புறத்தில் எந்த செயற்கை வெப்பமும் தேவையில்லாமல் வெப்பநிலை பராமரிக்கப்படும்.
இது பகல் வேளையில் சூரியனில் இருந்து பெறும் வெப்பத்தை கிரகித்துக் கொண்டு 12 முதல் 14 மணி நேரம் வரை அதாவது இரவு முழுவதும் கூடாரத்தை சூடாக வைத்திருக்கும். உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் கூடாரம் நான்கு வாரங்களில் செய்யப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்தாத பொருட்கள் கூடாரத்தை கட்ட பயன்படுத்தப்படுகின்றன. கூடாரத்தை உருவாக்க தேவையான பொருள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யலாம்.
சோனம் வாங்சுக் ஒரு பொறியியலாளர் கல்வி சீர்திருத்தவாதி மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். ‘மூன்று இடியட்ஸ்’ திரைப்படத்தில் அமீர்கானின் கதாபாத்திரத்திற்கு உத்வேகமாக இருந்தவர் வாங்சுக் என்பது சிறப்புத் தகவல். இதற்கு முன்னர் அதிக உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்திற்காக சூரிய வெப்ப மண் குடிசையை வடிவமைத்துள்ளார். பிராந்தியத்தில் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்திய லடாக் மாணவர் அவர். Students Educational and Cultural Movement of Ladakh (SECMOL) என்ற நிறுவனத்தையும் அவர் நிறுவியுள்ளார்.