கும்பத்தில் சனி அஸ்தமனம், இந்த 7 ராசிக்காரர்களுக்கு சிக்கல் ஏற்படும்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி நேற்று கும்ப ராசியில் அஸ்தமனமாகியுள்ளார். தற்போது மார்ச் 5 (34 நாட்கள்) வரை இதே நிலையில் தான் இருப்பார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு பேரழிவைத் தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

1 /12

மேஷ ராசி: தொழில், குழந்தைகளின் கல்வியில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எந்த விதமான பணத்தையும் எங்கும் முதலீடு செய்யாதீர்கள்.  

2 /12

ரிஷப ராசி: பொருளாதார சிக்கல்களைக் கொண்டுவரும். இந்த ராசிக்காரர்கள் பெற்றோரின் உடல் நலக் குறைவால் சிரமங்களை சந்திக்க நேரிடும்.  

3 /12

மிதுன ராசி: மிதுன ராசியினருக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும். எந்த வகையான நோய் அறிகுறிகளையும் கண்டு அலட்சியமாக இருக்காதீர்கள், உடனடியாக மருத்துவரை அணுகவும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று வேலையைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.  

4 /12

கடக ராசி: கூட்டாண்மையில் நடக்கும் தொழிலுக்கு கேடு ஏற்படும். திருமண வாழ்க்கையிலும் பெரும் இடையூறுகள் வரலாம், கவனமாக இருங்கள். தேவையில்லாத சண்டைகளில் ஈடுபடாதீர்கள்.  

5 /12

சிம்ம ராசி: வாழ்க்கைத்துணையுடன் சிக்கல்கள் ஏற்படும். உடல்நிலை சற்று கவனித்துக் கொள்ளவும். புதிய பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பீர்கள்.   

6 /12

கன்னி ராசி: பெண்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். உடல்நலக் குறைபாடுகள் இருக்கும். போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்திகள் கிடைக்கும்.  

7 /12

துலாம் ராசி: கடினமான காலங்களைக் கொண்டுவரும். குடும்பத்தில் கவனம் செலுத்துங்கள்.   

8 /12

விருச்சிக ராசி: நிதி நெருக்கடியை தரும். புதிதாக சொத்து, வாகனம் வாங்க நினைத்தால் மார்ச் 5ம் தேதி வரை தள்ளிவைக்கவும். அலுவலகம் மற்றும் வீடு மற்றும் குடும்பத்தில் சர்ச்சைகளை சந்திக்க வேண்டி வரும்.   

9 /12

தனுசு ராசி: உடன்பிறந்தவர்களுடன் உறவைப் பேணுங்கள். குறிப்பாக தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.   

10 /12

மகர ராசி: உங்கள் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.  

11 /12

கும்ப ராசி: திருமணமான தம்பதிகளுக்கு மன அழுத்தம் மற்றும் சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும். மகிழ்ச்சி, செல்வம் மற்றும் வெற்றியைப் பற்றி நாம் பேசிகையில் கும்ப ராசிக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.   

12 /12

மீன ராசி: செலவுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சேமிக்கவும். நீங்கள் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்திற்கு செல்ல திட்டமிட்டால், அதை உடனடியாக ரத்து செய்யவும். 

You May Like

Sponsored by Taboola