புதுச்சேரி: புதுவையில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 11,143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
கடந்த 19-ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 85.76 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளிவந்தன. காலை 9.15 மணியளவில் மொத்த வாக்குகள் எண்ணப்பட்டு இறுதிமுடிவு அறிவிக்கப்பட்டது.
நாராயணசாமி 18,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 11,143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.