ரதயாத்திரை வருகை: நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

ராம ராஜய் ரதயாத்திரை வருகைக்காக நெல்லை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 19) மாலை முதல் வரும் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 20, 2018, 06:27 AM IST
ரதயாத்திரை வருகை: நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு title=

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20) காலை தமிழகம் வருகிறது.

நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இன்று காலை ரத யாத்திரைக்கு நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. பின்பு மதுரைக்கு செல்கிறது. இவ்வாறு ரத யாத்திரை வரும் 25-ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. 

இந்த ரத யாத்திரைக்கு திமு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனா். ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், ரதயாத்திரைக்கு தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. யாரும் போரட்டத்தில் ஈடுபடதாவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதுதம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி வருகிற 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ளார். மேலும் ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்ப[ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Trending News