Utah பாலைவனத்திலிருந்து மர்மமான உலோக ஒற்றைப் பாளம் மறைந்துவிட்டதா?

அமெரிக்காவின் Utah பாலைவனத்திலிருந்து மர்மமான உலோக ஒற்றைப் பாளம் மறைந்துவிட்டதா?  என்ற கேள்வி உலக அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2020, 04:38 PM IST
  • Utah பாலைவனத்திலிருந்து மறைந்த மர்மமான உலோக ஒற்றைப் பாளம்
  • உலோக ஒற்றைப் பாளம் (monolith) தனியார் சொத்து என்று அரசு கூறுகிறது
  • "2001: A Space Odyssey படத்துடன் ஒப்பிடப்படுகிறது இந்த மர்மமான உலோக ஒற்றைப்பாளம்
Utah பாலைவனத்திலிருந்து மர்மமான உலோக ஒற்றைப் பாளம் மறைந்துவிட்டதா?

அமெரிக்காவின் Utah பாலைவனத்திலிருந்து மர்மமான உலோக ஒற்றைப் பாளம் மறைந்துவிட்டதா?  என்ற கேள்வி உலக அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்பு Utah பொதுப் பாதுகாப்புத் துறையின் ஏரோ பணியகத்தின் அதிகாரிகள் Utah பாலைவனத்தில் ஒரு விசித்திரமான உலோக ஒற்றைப் பாளம் (monolith) ஒன்றை கண்டுபிடித்தனர். வனவிலங்குத் துறையினருக்கு உதவுவதற்காக, பெரிய கொம்பு கொண்ட சிறப்பு ரக ஆடுகளை (bighorn sheep) கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டரில்  அந்த பிராந்தியத்தில் பறந்துக் கொண்டிருந்தனர். அப்போது உலோகத்திலால் ஆன ஒற்றைத்தண்டு (monolith) ஒன்றை கண்டறிந்தனர்.

இந்த விசித்திரமான மற்றும் எதிர்பாராத கண்டுபிடிப்பு பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு யாரும் பார்த்திராத, உலோகப் பாளம் திடீரென வெட்டவெளியில் தோன்றியது எப்படி என்பது குறித்து ஒரு வாரத்திற்கும் மேலாக உலகை உலுக்கிக் கொண்டிருந்த உலோக ஒற்றைப் பாளம் (monolith) திடீரென மறைந்துவிட்டது.

உலோக ஒற்றைப் பாளம் (monolith) காணாமல் போன செய்தி உட்டாவில் உள்ள நில மேலாண்மை துறைக்கு தெரிவிக்கப்பட்டது.  "அறியப்படாத தரப்பினரால்" உலோக ஒற்றைப் பாளம் (monolith) அகற்றப்பட்டதாக "நம்பகமான அறிக்கைகள்" கிடைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிரான "உலோக ஒற்றைப் பாளத்தை (monolith) அகற்றியது யார் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Read Also | இங்கிலாந்து இளவரசி டயானாவின் வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் 'The Crown' மெகா சீரியல்

நில மேலாண்மை துறையின் அதிகாரிகள் யாரும் அந்த பாளத்தை அகற்றவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், உலோக ஒற்றைப் பாளம்  (monolith) தனியார் சொத்தாகக் கருதப்படுவதால் அதை அகற்றும் நடவடிக்கையில் அரசு தரப்பில் யாரும் ஈடுபடவில்லை என்று  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

"உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தால் கையாளப்படும் தனியார் சொத்து சம்பந்தப்பட்ட குற்றங்களை நாங்கள் விசாரிக்கவில்லை" என்று நில மேலாண்மைத் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பளபளப்பான மற்றும் முக்கோண அமைப்பு கொண்ட உலோக ஒற்றைப் பாளம்  (monolith) நவம்பர் 18ஆம் தேதியன்று கண்டறியப்பட்டது, அது தரையில் இருந்து சுமார் 12 அடி உயரம் வரை இருப்பதாக கருதப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பானது, ஸ்டான்லி குப்ரிக்-இன் (Stanley Kubrick) அறிவியல் புனைகதைத் திரைப்படமான "2001: எ ஸ்பேஸ் ஒடிஸி" (2001: A Space Odyssey) இலிருந்து உருவான பல்வேறு சதி கோட்பாடுகளை உண்மை என நம்பத் தூண்டியது.  இந்த, திரைப்படத்தில் மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் ஒத்த தோற்றமுடைய அன்னிய ஒற்றைக்கற்கள் உதவுவதாக திரைக்க்தை அமைக்கப்பட்டிருந்தது.

Utah மாகாணத்திற்கு அருகிலுள்ள நியூ மெக்ஸிகோவில் வாழ்ந்த அமெரிக்க கலைஞரான ஜான் மெக்ராக்கனின் (John McCracken) அவாண்ட்-கார்ட் படைப்புடன், மர்மமாய் மாயமான உலோக ஒற்றைப் பாளம்  (monolith) ஒப்பிடப்படுகிறது.  John McCracken 2011 இல் இறந்துவிட்டார்.  இந்த ஒப்பீடு அவசியமானது என பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

Also Read | Thailand: பாரம்பரிய இசையை கேட்டு பசியாறும் பசித்த குரங்குகள் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News