அதிர்ச்சி சம்பவம்; வகுப்பறையில் ஆபாச படம் ஓட்டிய ஆசிரியர்!

சீன ஆசிரியர் ஒருவர் ப்ரஜக்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கையில் எதிர்பாரா விதமாக ஆபாச படத்தினை ஒளிப்பரப்பியுள்ளார்!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Nov 9, 2018, 08:01 PM IST
அதிர்ச்சி சம்பவம்; வகுப்பறையில் ஆபாச படம் ஓட்டிய ஆசிரியர்!
Screengrab

பெல்ஜியங்: சீன ஆசிரியர் ஒருவர் ப்ரஜக்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கையில் எதிர்பாரா விதமாக ஆபாச படத்தினை ஒளிப்பரப்பியுள்ளார்!

பாடங்களை மாணவர்களுக்கு எளிதாக புரியவைக்க வீடியோ வடிவில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பது வழக்கம். அந்த வகையில் சீன ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்ட பாடம் ஒன்றின் வீடியோவினை ஒளிக்க செய்துவிட்டு மாணவர்களுடன் அமர்ந்து பாடம் நடத்தியுள்ளார்.

அப்போது குறிப்பிட்ட பாடத்தின் வீடியோ முடிந்து, ஆசிரியரின் கணினியில் இருந்த ஆபாச படம் அடுத்தாக ஒளிப்பரப்பாகியுள்ளது. மாணவர்களை முந்தி ஆசிரியர் முன் சென்று இந்த வீடியோவினை அணைக்க கிட்டதட்ட 30 விநாடிகள் செலவாகியுள்ளது.

ஆரம்பத்தில் அதிர்ச்சியில் ஆழ்ந்த மாணவர்கள், ஆசிரியரின் பதற்றத்தினை உணர்ந்து சிரிப்பில் வகுப்பறையினை மூழ்கடித்துள்ளனர். இந்த சம்பவத்தினை வகுப்பில் இருந்த மாணவர்கள் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (வீடியோவிற்கான இணைப்பு...)

இணையத்தில் பரவிவரும் வீடியோவின் தகவல் படி, வகுப்பறையில் பெரும்பாலும் மாணவர்கள் அமர்ந்துள்ளனர். எனினும் சில பெண்கள் தங்களது நோட்டு புத்தகங்களை கையில் கொண்டு முகத்தினை மறைத்து தங்களது சங்கடத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்!