Dear CSK - யூடியூப்பில் #1 டிரெண்ட் ஆகும் வீடியோ

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

Last Updated : Mar 29, 2018, 10:12 AM IST
Dear CSK - யூடியூப்பில் #1 டிரெண்ட் ஆகும் வீடியோ title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவீரர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், டியர் சி.எஸ்.கே என்ற பெயரில், ரௌனக் மன்கொட்டில் இயக்கத்தில் வெளிவந்த வீடியோ யூடியூப்பில் #1 ஆக டிரெண்ட் ஆகி உள்ளது.

ஒரு பெண்ணின் பார்வையில் சி.எஸ்.கேவை வழிபாடுவதாக உள்ள இந்தப் பாடல் ஓவியங்கள், அனிமேஷன் துணையுடன் உருவாகியுள்ளது.  இந்த வீடியோவானது 3000 ஃப்ரேம்கள்  கொண்ட கை ஓவியங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 26-ம் தேதி வெளியான இந்த வீடியோ தற்போது வரை யூடியூப்பில் #1 ஆக டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Trending News