நலமாக இருக்கிறேன்; உங்கள் பிராத்தனைக்கு நன்றி - தனுஷ்!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. 

Last Updated : Jun 23, 2018, 02:18 PM IST
நலமாக இருக்கிறேன்; உங்கள் பிராத்தனைக்கு நன்றி - தனுஷ்!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. 

இப்படத்தின் வெற்றியை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர். முதல் பாகத்தினை இயக்கிய பாலாஜி மோகன் இரண்டாம் பாகத்தினை இயக்க தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்து வருகின்றார்.

இப்படத்தில் டோவினோ தாமஸ் வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக நடிகர் தனுஷூக்கு வலது காலிலும், இடது கையிலும் அடிப்பட்டது. முதலுதவிக்கு பின்னர் நேற்று படபிடிப்புகள் முடித்துக் கொள்ளப்பட்டது.

நடிகர் தனுஷ் உடல் நிலை குறித்து அனைவரம் விசாரித்து வந்த நிலையில் தற்போது அவர் தான உடல் நலத்துடன் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News