இணையத்தை கலக்கும் நீண்ட மூக்கு நாய்; வைரலாகும் Pics!

அசாதரணாம நீண்ட மூக்கு கொண்டுள்ள நாய் ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Updated: Oct 16, 2019, 01:16 PM IST
இணையத்தை கலக்கும் நீண்ட மூக்கு நாய்; வைரலாகும் Pics!

அசாதரணாம நீண்ட மூக்கு கொண்டுள்ள நாய் ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Eris என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நாய், ஒரு வயது உடையது எனவும், உலகின் மிக நீண்ட மூக்கு கொண்ட நாய் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து Eris-ன் உரிமையாளர் Joey Kidd-Kambourian கூறுகையில்., Eris-ன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நாளில் இருந்து எனக்கும் தனியொரு புகழ் கிடைத்துள்ளது. எதிரில் வரும் புதியவர்களும் என் கையில் இருக்கும் Eris-ஐ பார்த்து வியந்து, Eris குறித்து அறிந்துக்கொள்ள விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Joey Kidd-Kambourian இன்ஸ்டாகிராமில் மிகவும் செயல்பாடு மிக்கவராக Eris-ன் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். Eris-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Eris குறித்து அவரது உரிமையாளர் பகிர்கையில்., Eris சில்லின் ராணி என குறிப்பிட்டுள்ளார். அவரது வார்த்தைக்கு ஏற்ப Eris ஒரு ராணி போன்றே அழகு மிகுதியுடன் காட்சி தருகிறது.

உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி Eris, 2018-ஆம் ஆண்டு பொற்கொல்லர் Joey Kidd-Kambourian இடம் கிடைத்துள்ளது. Eris-ன் வருகைக்கு பின்னர் தனது வாழ்க்கை புத்துணர்வு பெற்றதாக Joey Kidd-Kambourian தெரிவித்துள்ளார். தனது புத்துணர்வை பகிர்ந்துகொள்ளும் விதமாக தினம் Eris-ன் புகைப்படங்களை Joey Kidd-Kambourian இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இணையத்தை கலக்கும் Eris-ன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.,

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Longest snoo owneyes ———————————————————

A post shared by Eris The Borzoi (@eriszoi) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

“Fellow hum —

A post shared by Eris The Borzoi (@eriszoi) on