வெளியானது கோலிசோடா-2 படத்தின் Trailer!

கோலிசோடா-2 திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டனர்!

Last Updated : Feb 14, 2018, 06:19 PM IST
வெளியானது கோலிசோடா-2 படத்தின் Trailer! title=

கோலிசோடா-2 திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டனர்!

கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `கோலிசோடா'.

`கோலிசோடா' வின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை (கோலிசோடா-2) படக்குழு தயாரித்து வருகின்றது.

ரஃப் நோட் படநிறுவனம் இப்படத்தை தயாரிக்க, விஜய் மில்டன் இயக்குகிறார். இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரினை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்!

முன்னதாக, கடந்த செப்., 8 அன்று, இப்படத்தின் இரண்டாவது ஆடியோ டீசர் வெளியானது. இந்த டீசருக்கு இயக்குநர் கவுதம் மேனன் பின்னணி வர்ணனை கொடுத்திருந்தார். கவுதம் மேனனின் கம்பீரமான குரலில் டீசர் அனைவரின் கவதையும் ஈர்த்தது!. டீசரில் இவரின் பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் படத்திலும் இருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Trending News