#HappyBirthdayARRahman: திலீப் குமாரில் இருந்து ஏ.ஆர். ரகுமான் ஆக மாறிய கதை

இன்று இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துக்கள்..!! திலீப் குமாரில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் ஆக மாறிய கதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 6, 2020, 06:01 PM IST
#HappyBirthdayARRahman: திலீப் குமாரில் இருந்து ஏ.ஆர். ரகுமான் ஆக மாறிய கதை title=

புது தில்லி: ஆஸ்கார் விருது பெற்ற இசைக்கலைஞர் ஏ. ஆர். ரகுமான் (A R Rahman) ஜனவரி 6 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். ஏ. ஆர். ரகுமான் பற்றி நிறைய விசியங்கள் இருக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால், அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு உள்ளார். அவரது முதல் பெயர் திலீப் குமார். பின்னர் அவர் தனது பெயரை 'அல்லாஹ் ராகா ரஹ்மான்' என்று மாற்றினார். இதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.

உலகமே கொண்டாடும் இசைக்கலைஞர் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இன்று 53வது பிறந்தநாள். அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் #HappyBirthdayARRahman என்ற ஹெஷ்டேக் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1966 ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது ஆகும்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். இதே படத்திற்காக அவருக்கு கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது கிடைத்தது. இந்த விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழரான ஏ. ஆர். ரகுமான் பெற்றார். அதேபோல இவருக்கு 2010 ஆம் ஆண்தில் "பத்ம பூசண் விருது" பெற்றார்.

ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் பெயர் மாற்றம் குறித்து அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியது, 

பெயரை மாற்றுவது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், திலிப் குமார் என்ற தனது பெயரை விரும்பவில்லை என்று கூறியிருந்தார். அந்த பெயர் தனது உருவத்துடன் பொருந்தவில்லை என்று அவர் உணர்ந்தார். ஆனால் திலிப் குமார் என்ற பெயரை மனதில் இருந்து மாற்றவில்லை எனவும் கூறினார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் கூற்றுப்படி, தனது தங்கையின் திருமணத்திற்காக, அவரின் ஜாதகத்தை அறிய, அவரது தாயார் ஒரு ஜோதிடரிடம் சென்றார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பெயரை மாற்ற விரும்பிய காலமும் இதுதான்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "அப்துல் ரஹ்மான்" அல்லது "அப்துல் ரஹீம்" என்ற பெயர் நன்றாக இருக்கும் என்று ஜோதிடர் கூறினார். இதன்பிறகு தான் "ரஹ்மான்" என பெயரை மாற்ற விரும்பினார். இந்த வழியில் தான் "திலீப் குமார்" "ஏ.ஆர்.ரஹ்மான்"

ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்தில் பிறந்தார். பின்னர் அவர் தனது மதத்தை மாற்றிக்கொண்டார். ஒரு நேர்காணலில், ஏ.ஆர்.ரஹ்மானும் இதன் பின்னணியில் உள்ள கதையைச் சொன்னார். 1986 இல் தந்தை இறந்த பிறகு, அவர் காத்ரி சாஹேப்புடன் அதிக தொடர்பில் இருந்தார். இங்கிருந்து அவருக்கு மதம் மாற்றம் பற்றி ஒரு யோசனை வந்தது. அதன் பிறகு ஏ. ஆர். ரகுமான் தன் குடும்பத்துடன் சூஃபி இஸ்லாமுக்கு மாறினர். இது குறித்து, யாரும் இதை ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்று ரகுமான் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News