சமூக வலைதளங்களில் அடிக்கடி பாம்பு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சில நேரங்களில் பாம்புகளின் ஆபத்தான வீடியோக்கள் வைரலாகும். சில சமயங்களில் இதயத்தைத் தொடும் வீடியோக்கள் வைரலாகின்றன. பாம்பு ஆபத்தான உயிரினம். அதனிடம் விஷம் இருக்கிறது. ஆனால் அதுவும் ஒரு ஜீவராசிதான். மற்ற உயிரினங்களைப் போலவே அதுவும் சுவாசிக்கும் மற்றும் குடிக்க நீர் தேவை. அந்த தண்ணீர் அவைகளுக்கு முறையாக கிடைக்காதபோது, மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. அப்படி காட்டில் தண்ணீர் கிடைக்காத பாம்பு ஒன்று ஊருக்குள் புகுந்த வீடியோ தான் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | பைக்கில் முத்தம் கொடுத்துக்கொண்டே சென்ற ஜோடி! வைரலாகும் வீடியோ!
பிசிலரி வாட்டர் குடிக்கும் பாம்பு
வைரலான வீடியோவில் நாகப்பாம்பு ஒன்று மிகவும் தாகத்துடன் இருப்பதைக் காணலாம். கடும் வெப்பம் காரணமாக வெளியே வந்து தண்ணீர் தேடி வந்துள்ளது. இதனை அறிந்த ஒரு நபர் தனது பாட்டிலிலிருந்து ஒரு நாகப்பாம்புக்கு தண்ணீரைக் கொடுக்கும்போது, பாம்பு மிக வேகமாக தண்ணீரைக் குடிக்கிறது. பாம்புக்கு தண்ணீர் கொடுத்தவரை பயனர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.
நாகப்பாம்பு ஆபத்தானது
நாகப்பாம்பு பாம்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லலாம். இந்தியாவில், பெரும்பாலான இறப்புகள் நாகப்பாம்பு கடியால் நிகழ்கின்றன. பாம்பு விஷத்தால் வெகு சிலரே இறப்பதாகவும், பெரும்பாலானோர் பாம்பு கடியால் பயந்து உயிரிழப்பதாகவும் பாம்புகள் பற்றிய அறிவு உள்ளவர்கள் கூறுகின்றனர். எனவே, ஒரு பாம்பு உங்களைக் கடித்தால், பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
மேலும் படிக்க | பிடிக்க வந்தவரை கடிக்க பாயும் ராட்சத நாகம்..! அய்யய்யோ..என்னாச்சு? வைரல் வீடியோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ