அமெரிக்க டாலேன்ட் ஷோவில் Marana Mass பாடல்! செம்ம வைரல் வீடியோ!!

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவர்கள் ரஜினியின் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ உலகளவில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

Updated: Feb 12, 2020, 10:59 AM IST
அமெரிக்க டாலேன்ட் ஷோவில் Marana Mass பாடல்! செம்ம வைரல் வீடியோ!!

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவர்கள் ரஜினியின் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ உலகளவில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ”Americas Got Galent” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் காமெடி, நடனம், பாடுதல் போன்ற பல கலைகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த சில சிறுவர்கள் தங்களது ஆடும் திறமையை வெளிக்காட்டியுள்ளனர். அப்போது ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு அவர்கள் அட்டகாசமாக ஆடியதை பார்த்து நடுவர்கள் எழுந்து நின்று கைத்தட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மரண மாஸ் பாடலுக்கு சிறுவர்கள் ஆடிய மாஸ் வீடியோ இணையத்தில் வெகு வைரலாகி வருகிறது. வீடியோ இதோ:-