போலீசாக விஷ்ணு விஷால்! வெளியானது மோஷன் போஸ்டர்!!

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்துள்ள படம் ராட்சசன். ‘ராட்சசன்’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் போலீசாக நடித்துள்ளர்.

Last Updated : May 11, 2018, 09:37 AM IST
போலீசாக விஷ்ணு விஷால்! வெளியானது மோஷன் போஸ்டர்!! title=

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்துள்ள படம் ராட்சசன். ‘ராட்சசன்’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் போலீசாக நடித்துள்ளர்.

சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. வெகு விரைவில் படத்தின் டீசர், ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Trending News