கேரளா மாநில மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அங்குள்ள சாலை ஒன்று இரண்டாக பிளந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா-கர்நாடக எல்லை பகுதியில் தொடர்நது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த கனமழையால் சுமார் 20 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சிலரை காணவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கேரளா மாநில மலப்புறம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள சாலை இரண்டாக பிளந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பான வீடியோ ANI செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
#WATCH: Road gets washed out in Malappuram after flash flood hit the region. #Kerala pic.twitter.com/2CqWjkn0no
— ANI (@ANI) August 9, 2018