இணையத்தை கலக்கும் நோரா ஃபதேஹி-ன் 'கஸாலி' நடன வீடியோ!

அரபு பாடகர் சாத் லாமாரிட்-ன் 'கஸாலி' பாடலுக்கு பிரபல நடிகை நோரா ஃபதேஹி நடன வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது! 

Last Updated : Jun 18, 2018, 04:36 PM IST
இணையத்தை கலக்கும் நோரா ஃபதேஹி-ன் 'கஸாலி' நடன வீடியோ!  title=

அரபு பாடகர் சாத் லாமாரிட்-ன் 'கஸாலி' பாடலுக்கு பிரபல நடிகை நோரா ஃபதேஹி நடன வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது! 

பாலிவுட் நடிகையும் மாடலும்மான நோரா ஃபதேஹி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ரசிகர் கூடங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நடன வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை நோரா ஃபதேஹி ஒரு கிராக் நடனத்தை ஆடியுள்ளார். 

இவர் அரபு பாடகர் சாத் லாமரெட்டினின் பாடலான "கஸாலி" பாடளை இவர் ரீமிக்ஸ் செய்து ஒரு அருமையான நடன வீடியோவை பகிந்துள்ளார். அரபு பாடகர் சாத் லாமரெட்டினின் பாடலுக்கு சவுதியில் மட்டும் இல்லை அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் அதிகம். இவரின், மால் ஹபீபை மாலூ பாடலை ரசிக்காதவர்களே கிடையாது. இவரின் பாடலுக்கு நடிகை நோரா ஃபதேஹி எளிமையான நடன நகர்வுகளுடன் இவர் நடனமாடியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இந்த பதிவை இவர் ஈது தினத்தன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுடன் அவர் மும்பையில் உள்ள செயின்ட் கேட்ரைன் அனாதை இல்லத்தின் குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்தும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.  

இதோ அந்த வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...! 

 

Trending News