‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்பட பிரம்மாண்ட trailer வெளியானது!

சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இத்திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

Updated: Sep 18, 2019, 09:03 PM IST
‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்பட பிரம்மாண்ட trailer வெளியானது!
Screengrab

சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இத்திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். 

இவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் வேலைகள் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

பல வெற்றி படங்களை தயாரித்தும், வெளியிட்டிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ‘சைரா’ படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

முன்னதாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் (Amazon Prime Video) 40 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆக, படத்தின் வெளியீட்டிற்க முன்னதாகவே இத்திரைப்படம் 40 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய பெருமை பெற்றுள்ளது.

வரும் அக்டோபர் 2-ஆம் நாள் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் திரை வெளியீட்டிற்கு 60 நாள் பின்னர் டிஜிட்டல் பிலாட்பார்மில் இத்திரைப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.