Video: ராஜஸ்தான் சாலை விபத்தில் மழைப் போல் கொட்டிய மதுபானம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த மதுபாட்டில்கள் முழுவதும் சேதமானது!

Last Updated : Sep 22, 2018, 05:06 PM IST
Video: ராஜஸ்தான் சாலை விபத்தில் மழைப் போல் கொட்டிய மதுபானம்! title=

ராஜஸ்தான் மாநிலத்தில் மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த மதுபாட்டில்கள் முழுவதும் சேதமானது!

ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் மாவட்டத்தின் மது பாட்டில்களை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆனது டோல் கேட்டில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாக லாரியின் முன்புறம் நின்ற கார் சேதமடைந்துள்ளது மேலும் கார் ஒட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்தானது டோல் கேட்டில் இருந்து CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது விபத்துக்குள்ளான லாரியில் இருந்து மதுப்பாட்டில்கள் முழுவதும் பாழாகி முன் நின்றிருந்து காரின் மீது பீர் ஷவராய் தெளித்தது.

தகவளறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வந்து காயமடைந்த ஓட்டுநரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பம் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையினை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்!

Trending News