இந்தியாவுடன் மோதிபார்க்க தயார்; சவால் விடும் பாகிஸ்தான்!

மோதி பார்க்க தயார் அணுஆயுத போருக்கு இந்தியாவுக்கு சவால் விடும் பாகிஸ்தான். 

Last Updated : Jan 14, 2018, 11:37 AM IST
இந்தியாவுடன் மோதிபார்க்க தயார்; சவால் விடும் பாகிஸ்தான்! title=

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்திற்கு தற்போது பாகிஸ்தான் பதிலளித்திருப்பதுடன், இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.

பாகிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறி இருப்பதாவது:-

இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. 

பாகிஸ்தான் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.அந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாகிஸ்தான் , தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News